மேலும் செய்திகள்
வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி
19-Sep-2025
கிருஷ்ணகிரி, சென்னை, எஸ்.கே.பி.,புரம் அன்னை தெரசாநகரை சேர்ந்தவர் ஞானபிரபு, 34. இவர் சென்னையில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் மானேஜராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றுள்ளார். திருவண்ணாமலை சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் வந்த மற்றொரு காரின் டிரைவர், ஞானபிரபுவின் காரின் பின்பக்க கதவு சரியாக சாத்தப்படாமல் இருப்பதாக கூறி சென்றார். இதனால் காரை சாலையோரமாக நிறுத்திய ஞானபிரபு, கதவை பூட்டி விட்டு, மீண்டும் ஏற முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2025