உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரம் விழுந்து கார், டூவீலர் சேதம்

மரம் விழுந்து கார், டூவீலர் சேதம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மரம் விழுந்து அருகில் நின்ற கார் டூவீலர் சேதமடைந்தன.கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் யூக்கலிப்டிஸ் மரங்கள் சாலையோரம் உள்ளன. இவற்றில் பழமையான மூன்று மரங்கள் சாய்ந்த நிலையில் அபாயகரமாக இருந்தது. அவற்றை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்த நிலையில், சாய்ந்த நிலையில் இருந்த மரம், இன்று அதிகாலை வேரோடு பெயர்ந்து அருகில் நின்ற ஆல்டோ கார் மற்றும் ஒரு டூவீலர் மீது விழுந்தது. மேலும் சாலையோரம் இருந்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. சத்தம் கேட்டு எழுந்து வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலை வேலை என்பதால் பொதுமக்கள் யாரும் நடமாட வில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை