உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குப்பைமேடாகும் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., ஆக்கிரமிப்புகள், துர்நாற்றத்தால் மக்கள் அவதி

குப்பைமேடாகும் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., ஆக்கிரமிப்புகள், துர்நாற்றத்தால் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் அள்ளப்படாத குப்பை துர்நாற்றத்தால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், ஏராளமான தொழிற்சாலைகள், நகைக்கடைகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிப்போருக்கு முக்கிய நகரமாக விளங்குகிறது. காவேரிப்பட்டணத்தின், கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலை வழியாகவே அனைத்து பஸ்களும் சென்று வருகின்றன. மாவட்டத்தின் முக்கிய பகுதியாக கருதப்படும் இங்கு, கடந்த சில வாரங்களாகவே குப்பை அள்ளப்படவில்லை. இதனால், நகரின் பல பகுதிகள், குடியிருப்புகளில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால், குப்பை அள்ளும் வண்டிகள் பழுதாகி நிற்பதாக அலட்சியமாக பதில் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நகர் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மழைநீர் கால்வாய் இதுவரை துார்வாரப்படவில்லை. அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இது குறித்து கடந்த, 3 மாதமாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, டவுன் பஞ்., தலைவர், செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி கூறுகையில், “இது குறித்து புகார் வந்துள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ