உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோர் சான்றிதழ் சரிபார்ப்பு

சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோர் சான்றிதழ் சரிபார்ப்பு

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு, நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள, 732 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பணிக்கு, 18 வயது முதல், 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க தெரிவிக்கப் பட்டது. மாவட்டம் முழுவதும், 3,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் நடந்தது.கிருஷ்ணகிரி வட்டத்தில், 62 அரசுப்பள்ளிகள் மற்றும், 3 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள, 65 சமையல் உதவியாளர் பணிக்கு, 364 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 188 பேரின் மனுக்கள் தவிர்த்து, மற்றவை நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடந்தது. உதவி திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி பி.டி.ஓ., உமாசங்கர், துணை பி.டி.ஓ., கணேசன் முன்னிலையில், அலுவலக ஊழியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொண்டனர். இதன் அறிக்கை, கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பணியிடங்களுக்கான ஆட்களை நியமிப்பார் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி