கோவிலில் சண்டி ஹோமம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் அருள்முருகன் கோவில் உள்ளது. இங்கு, உலக மக்கள் நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சண்டி ஹோமம் நேற்று நடந்தது. கோவில் நிர்வாக துணைத்தலைவர் சுதா நாகராஜன், செயலாளர் சந்திரசேகர், சுந்தர் உட்பட, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.