உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போத்தனுாரில் பராமரிப்பு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

போத்தனுாரில் பராமரிப்பு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சேலம், போத்தனுாரில் பராமரிப்பு பணியால், வரும், 14ல் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: போத்தனுாரில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், வரும், 14ல் அந்த வழியே செல்லும் ரயில்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை, 6:30க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில், போத்தனுார், இருகூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை, கோவை வடக்கு, பீளமேடு ஸ்டேஷன்கள் செல்லாது.காலை, 7:20க்கு கிளம்பும் பாலக்காடு - கோவை ரயில், காலை, 8:00 மணிக்கு புறப்படும் பொள்ளாச்சி - கோவை ரயில் ஆகியவை, போத்தனுார் வரை மட்டும் இயக்கப்படும். போத்தனுார் முதல், கோவை வரை ரத்து செய்யப்படுகிறது. காலை, 8:20க்கு கிளம்பும் மேட்டுப்பாளையம் - போத்தனுார் ரயில், கோவை வரை மட்டும் இயக்கப்படும். கோவை முதல் போத்தனுார் வரை ரத்து செய்யப்படுகிறது. காலை, 9:40க்கு கிளம்ப வேண்டிய போத்தனுார் -மேட்டுப்பாளையம் ரயில், 9:55க்கு கோவையில் இருந்து புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி