உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மதியழகன் எம்.எல்.ஏ.,வின் தாயார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மதியழகன் எம்.எல்.ஏ.,வின் தாயார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வந்தார். விழா முடிந்ததும் அவர் கிருஷ்ணகிரி காந்தி சாலையிலுள்ள, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,வின் வீட்டிற்கு சென்றார். கடந்த மாதம் எம்.எல்.ஏ.,வின் தாயார் கண்ணம்மாள் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். அப்போது எம்.எல்.ஏ.,வின் குடும்பத்தினர் உடனிருந்தனர். பிறகு மதிய உணவை முடித்து, அங்கிருந்து ஓசூர் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ