உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி;வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி;வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில், ஓசூர் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவியர் தனிநபர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில், மாணவி கனிகா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல், மாணவியர் சார்வி வெள்ளிப்பதக்கமும், ஜெய்ஸ்ரீ வெண்கலப்பதக்கமும் வென்றனர். பெண்கள் இரட்டையர் போட்டியில், கனிகா - ஜெய்ஸ்ரீ ஜோடி வெற்றி பெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆதித்யா ஆனந்த் முதலிடமும், மாணவன் ஜிஷ்ணு சங்கர் இரண்டாமிடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் ஆதித்யா - ஷிரிஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், மாணவன் ராஜ் அரவிந்தன் அழகர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், தங்களது பதக்கம் மற்றும் சான்றிதழ்களை காட்டி, ஓசூர் மாநகர மேயர் சத்யாவை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றனர். ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் நாகராஜ், வடக்கு பகுதி, தி.மு.க., செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாநகர, தி.மு.க., பொருளாளர் தியாகராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை