உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி:மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று குழந்-தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. வார்டு கவுன்சிலர் செந்-தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நளினி வரவேற்றார். நிகழ்ச்சியில், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், தமி-ழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், இசைக்கருவி-களைக் கொண்டு மாணவியர் வாசித்துக் காட்டினர். தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவியருக்கும், பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றர்களுக்கும், கலை நிகழ்ச்-சிகளில் பங்கேற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, முன்னாள் பிரதமர் நேருவின் படத்திற்கு ஆசி-ரியர்கள் மற்றும் மாணவியர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் வேலு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி ஞானமேரி, உறுப்பினர்கள் முருகன், ஜெயந்தி, அம்பிகா உள்பட பலர் பங்கேற்றனர். இதே போல், கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நி-லைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்தார். மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி, கலெக்டரின் வாழ்த்து மடல் படிக்கப்பட்டது.மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டன. இதே போல் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி