விபத்தில் கிளீனர் பலி
விபத்தில் கிளீனர் பலி கிருஷ்ணகிரி, அக். 12-காவேரிப்பட்டணம் அடுத்த சப்பாணிப்பட்டியில், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கன்டெய்னர் லாரி சென்றுள்ளது. பின்னால் வேகமாக வந்த ஈச்சர் லாரி கட்டுப்பட்டையிழந்து கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், ஈச்சர் லாரி கிளீனர் மகேந்திரா ஷாரின், 28, பலியானார். லாரி டிரைவர் உள்பட மேலும் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.