உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.3 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் காணொலியில் அடிக்கல் நாட்டிய முதல்வர்

ரூ.3 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் காணொலியில் அடிக்கல் நாட்டிய முதல்வர்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்குகிறது. இதன் அருகே, 3 கோடி ரூபாய் மதிப்பில், முதல்வர் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கு, காணொலி காட்சி மூலம், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர், பூமி பூஜை செய்தனர்.இந்த மினி விளையாட்டு அரங்கத்தில், நிர்வாக அலுவலகம், கால்பந்து, கைப்பந்து, கோ கோ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கபடி, ஓட்டப்பந்தய மைதானம், பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரி, காம்பவுண்ட் சுவர், குடிநீர் சுத்திகரிப்பு மையம், மெடல் போடியம், மைதானத்தை சுற்றி சோலார் மின் விளக்குகள், மின் வசதிகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் அப்துல்கலாம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை