உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புரட்டாசியை முன்னிட்டு 4 சனிக்கிழமையும் உழவர் சந்தையில் தேங்காய், தக்காளி இலவசம்

புரட்டாசியை முன்னிட்டு 4 சனிக்கிழமையும் உழவர் சந்தையில் தேங்காய், தக்காளி இலவசம்

காரிமங்கலம்: 'காரிமங்கலம் உழவர் சந்தையில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, 4 சனிக்கிழமையும் காய்கறி வாங்கும் நுகர்வோருக்கு, தக்காளி, தேங்காய் இலவசமாக வழங்கப்படும்' என, வேளாண்மை துணை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் வருகை அதிகரிக்க இலவச திட்டங்களை, உழவர் சந்தை அதிகாரிகள் தொடர்ந்து, செயல்படுத்தி வருகின்றனர். வெளி மார்க்கெட் மற்றும் வெளி சந்தையை விட, உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைவாக இருக்கும். உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றன. காரிமங்கலம் உழவர் சந்தையில், புரட்டாசி மாதத்தின், 4 சனிக்கிழமைகளும், இன்று முதல், 100 ரூபாய்க்கு காய்கறி வாங்கினால், ஒரு தேங்காய், 200 ரூபாய்க்கு காய்கறி வாங்கினால், ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும். இந்த அறிவிப்பு, பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து, இலவசங்கள் மேலும் அதிகரிக்கபடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி