விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விளக்கமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு கலெக்டர் டோஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், விவசாயிகளின் மனுக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் நின்ற அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் சரயு, 'டோஸ்' விட்டார்.நேற்றைய கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகா-ரிகள் அளித்த பதில்கள்:விவசாயி செந்தில் குமார்: மானியத்தில் மாட்டுக் கொட்டகை அமைத்துத்தர வேண்டும் என கடந்த, 5 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். கலெக்டர் சரயு: ஏற்கனவே வழங்கப்பட்ட மாட்டுக் கொட்ட-கையை பலர் தவறாக பயன்படுத்தியதால், அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். கணேஷ் ரெட்டி: தளி அடுத்த தேவகானப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட கோமட்ட நஞ்சையன் ஏரியை துார்வாரி பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.தளி துணை பி.டி.ஓ., துளசி ரஞ்சன், பதில் அளிக்காமல் நின்-றதால் கோபமான கலெக்டர், 'இந்த மனு இன்று வரும் என தெரியும் இல்லையா, அதனால் முறையான பதிலுடன் வரவேண்-டாமா, பதில் சொல்லாமல் இருக்க இங்கு எதற்கு வருகிறீர்கள். ஆபீசில் அமர்ந்து, 10 பைலாவது பார்த்திருக்கலாம்' என, டோஸ் விட்டார்.தாசப்பா: தேன்கனிக்கோட்டையில் காட்டுப்பகுதி அதிகம் உள்-ளதால், ரேஷன் கடைகளில் அரை லிட்டராவது மண்-ணெண்ணெய் வழங்க வேண்டும்.கலெக்டர் சரயு: பரிசீலிக்கப்படும். ராமகவுண்டர்: பர்கூர் தாலுகா கீழ்பூங்குருத்தி கிராமத்தில், 100 ஆண்டுகளாக, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அதில் மலை கிராம மக்களும் அடங்குவர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.கலெக்டர்: மலை கிராம மக்களாக இருந்தால் பட்டா வழங்கப்-படும். சிவகுரு: பாலேகுளி முதல் சந்துார் வரை நிலம் மற்றும் மரங்-களை கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் அமைக்க அர-சுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. டி.ஆர்.ஓ., சாதனைகுறள்: அதில் உள்ள சிக்கல் குறித்து பேசி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசுக்கு அனுப்பி இழப்பீடு பெற்றுத்தரப்படும்.இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.நில அளவீடு, பட்டா, ஏரி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு கடந்த, 9ல் விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றாலும், முறையாக கையாளாத, தெளிவான விளக்கமளிக்-காத அதிகாரிகளுக்கு, கலெக்டர் சரயு,'டோஸ்' விட்டார்.