உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் நாளை மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் நாளை மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நாளை, மாங்கனி கண்காட்சி தொடங்குவதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகிலுள்ள திடலில், 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை (சனிக்கிழமை) துவங்குகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள், அரங்குகள், பாதுகாப்பு அம்சங்கள், குடிநீர், மின் வசதிகள், அரங்கின் உள்ளே மற்றும் வெளியே வரும் பாதைகள் ஆகியவற்றை, கலெக்டர் தினேஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:---இந்த கண்காட்சியில், மா அரங்கு, பல்வேறு துறைகள் சார்ந்த, 32 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மா விற்பனை கடைகள், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை கடைகள், ஆவின் பாலகம், கேளிக்கை அரங்குகள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி தினமும் மாலை, 5:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை நடக்கும். இதில் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. கண்காட்சிக்கு வந்து செல்ல வசதியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்து பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு வருவோர் ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, சின்ன ஏரி மற்றும் பஸ் ஸ்டாண்ட் பின்புற வழியாக, தர்கா அருகிலுள்ள கண்காட்சி திடலுக்கு வர வேண்டும். திரும்பி செல்வோர் டோல்கேட் அருகிலிருந்து சர்வீஸ் சாலை, போக்குவரத்து பணிமனை, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, இணை இயக்குனர்கள் பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலைத்துறை) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை