உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

பாலக்கோடு: தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் கடந்த, 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், கவுரவ விரிவுரையாளர்களை வைத்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. தமிழக அரசு தற்போது கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 25,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கி வருகிறது. ஆனால், யுஜிசி விதிமுறைப்படி மாதம், 50,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாத சம்பளமாக வழங்க, மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவும் கடைபிடிக்கப்படவில்லை. அதனால், தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து கண்டனத்தை தெரிவிக்க, பல்வேறு அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பணிபுரியும், 60 கவுரவ விரிவுரையாளர்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !