உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.7.52 கோடி மதிப்பில் சாலை பணிகள் துவக்கம்

ரூ.7.52 கோடி மதிப்பில் சாலை பணிகள் துவக்கம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை - கெலமங்கலம் சாலையை, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கும் பணி, தேன்கனிக்கோட்டை - தல்சூர் ஒரு வழிச்சாலையை, 5.50 கோடி ரூபாய் மதிப்பில், இருவழிச் சாலையாக மாற்றும் பணி, பெட்டமுகிலாளம் பஞ்., ஜெய்புரம்புதுார் முதல் தாசய்யன்கொட்டாய் வரை, 38 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, பெட்டமுகிலாளம் முதல் காளிக்கட்டம் வரை, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி ஆகியவற்றை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா, ஒன்றிய கவுன்சிலர்கள் சுஜாதா மாரப்பன், சென்னீரப்பா, கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி