உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீப்பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி

தீப்பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி

கிருஷ்ணகிரி:சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மார்க்கமாக புனேவிற்கு நேற்று மருத்துவமனைக்கு தேவையான சேர்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. பீஹார் மாநிலம், கயா மாவட்டத்தை சேர்ந்த பிஸ்சா பிரசாத், 45, என்பவர் லாரியை ஓட்டி சென்றார். மதியம், 2:20 மணியளவில், கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்து தீப்பிடித்தது. லாரியை சாலையோரமாக நிறுத்தி, ஓட்டுனர் கீழே இறங்கி பார்ப்பதற்குள் லாரி தீப்பற்றியது. அப்பகுதி சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மளமளவென தீ பரவியதால் கன்டெய்னர் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, லாரிக்குள் இருந்த பொருட்களை வெளியில் எடுத்து போட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், போக்குவரத்தை சீர்செய்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ