உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு

மா விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதம்வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டுகிருஷ்ணகிரி, அக். 18-வருவாய்த்துறையின் அலட்சிய போக்கால், மா விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க தாமதம் ஆவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 38,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி நடக்கிறது. மா விவசாயம் கடந்த, 5 ஆண்டுகளாக வறட்சி, பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதித்துள்ளது. இந்தாண்டு கடும் வெயிலால் மரங்கள் காய்ந்து, மகசூல் முழுவதும் பாதித்தது.இதையறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, தோட்டக்கலைத்துறை, 88 சதவீதம் மா மகசூல் பாதித்துள்ளதாக கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி அவர், உடனடியாக உயரதிகாரிகளை சந்தித்து தெரிவித்தார். மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பும் வழங்க, மா விவசாயிகளின் சாகுபடி விபரங்களை பெற கூறப்பட்டது. அதன்படி, மா விவசாயிகள் தங்கள் விபரங்களை கொடுத்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகளுக்கு, வருவாய் துறையினரிடம் சாகுபடி விபரங்கள் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த கால தாமதம், மா விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. வருவாய்த்துறையினர் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியும், மா விவசாயிகளை அலட்சியப் படுத்துகின்றனர். இதனால், மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை