உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயிர் உரங்கள், இயற்கை மண் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தல்

உயிர் உரங்கள், இயற்கை மண் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தல்

கிருஷ்ணகிரி; உயிர் உரங்கள் மற்றும் இயற்கை மண் குறித்து, வேளாண் கல்லுாரி மாணவியர் கண்காட்சி வைத்திருந்தனர்.ஓசூர் அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவியர், கிருஷ்ணகிரி அருகிலுள்ள பாலகுறி கிராமத்தில், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை மண் மாற்று பொருட்களை கண்காட்சியாக வைத்திருந்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.கண்காட்சியில், ரைசோபியம், அஸோட் டோபாக்டர், மிமய்கோரைசா போன்ற உயிர் உரங்களின் தயாரிப்பு முறைகள், பயன்பாடுகள் மற்றும் பயிர் விளைச்சல் அதிகரிப்பு குறித்த விபரங்கள் விளக்கப்பட்டன. இயற்கை மண் மாற்று பொருட்களான கம்போஸ்ட், வெர்மிகம் போஸ்ட், தழையுரம், புண்ணாக்கு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு, ரசாயன உரங்களுக்கு மாற்றாக அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கண்காட்சியால், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மண் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும் என, வேளாண் கல்லுாரி மாணவியர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்