உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் தி.மு.க., கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் தி.மு.க., கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி :ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில், ஈ.வெ.ரா., புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் எல்.இ.டி., திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்தனர். தி.மு.க., மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலர் இசை, சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தேவகுமார், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மக்களுக்கு இனிப்பு வழங்கி தி.மு.க.,வினர் கொண்டாடினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி