உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

பேரிகை:'தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்' மற்றும் தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரிகை பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது.மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசினார். ஒன்றிய பொறுப்பாளர் லோகேஷ்ரெட்டி வரவேற்றார். ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தனர்.மாணவரணி மாநில துணை செயலாளர் தமிழ் க.அமுதரசன் பேசினார். முன்னதாக, 'தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்' என, அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை