உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., தெருமுனை பிரசாரம்

தி.மு.க., தெருமுனை பிரசாரம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மேற்கு நகர, தி.மு.க., இளைஞரணி சார்பில், தி.மு.க., நான்காண்டு சாதனைக்கூட்ட தெருமுனை பிரசாரம் நடந்தது. தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்ஸம், வேலுமணி தலைமை வகித்தனர்.நகர இளைஞரணி அமைப்பாளர் முகமதுஅலி வரவேற்றார். துணை அமைப்பாளர்கள் ஜாபர், ஜெயசிம்மன், சூர்யா, பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். இதில், தி.மு.க., பேச்சாளர்கள் அபதுல் ரகுமான் பாரி, ஆனந்த் சைனி பேசினர்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை