தி.மு.க., மாணவரணிதண்ணீர் பந்தல் திறப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., மாணவரணி சார்பில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி அருகே, தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெயேந்திரன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, வாழைப்பழம், முலாம் பழம், சாத்துக்குடி ஜூஸ், நுங்கு, இளநீர், மோர் ஆகியவற்றை வழங்கினார்.மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.