உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்

தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, கெலமங்கலத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட அமைப்பாளர் சுமன் தலைமை வகித்தார். கெலமங்கலம் செயலாளர் தஸ்தகீர் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா, தலைமை கழக பேச்சாளர்கள் மதிமாறன், பவன்யா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ