| ADDED : ஜூன் 12, 2024 06:55 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணியை, நகராட்சி தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் கால்வாய்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு, தண்ணீர் தேங்குவதாக பொதுமக்கள், நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகாரளித்தனர். இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணியை, நகராட்சி தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்து பேசுகையில், ''தற்போது வரை, 10 வார்டுகளிலுள்ள மழை நீர் கால்வாய்களை துார்வாரும் பணி முடிந்துள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள மழைநீர் கால்வாய் பணிகள் துார்வாரும் பணியும் முடியும்,''என்றார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து, துணை மேற்பார்வையாளர் சரவணன், கவுன்சிலர் பிர்தோஷ்கான் மற்றும் பலர் உடனிருந்தனர்.