உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விலங்குகளால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இ.கம்யூ., தீர்மானம்

விலங்குகளால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இ.கம்யூ., தீர்மானம்

கிருஷ்ணகிரி: வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்-பீடு வழங்க, இ.கம்யூ., தீர்மானம் நிறைவேற்றியது.கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பஞ்., கீழ்பூங்குருத்-தியில், இ.கம்யூ., கட்சியின் கிளை துவக்க விழா நேற்று நடந்-தது. வட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், கட்சியின் அமைப்பு நிலை மற்றும் அரசியல் நிலை குறித்து மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு பேசினார். புதிய பொறுப்பாளர்கள் தேர்வில், செயலாளராக வெங்கடேசன், துணை செயலாளராக சக்திவேல், பொருளாளராக சரவணன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், கீழ்பூங்குருத்தியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, 120 குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு உடனடியாக நிலப்பட்டா வழங்க வேண்டும். ஆண்டு கணக்கில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். விவசாய நிலத்தில் யானை மற்றும் வன விலங்கு-களால், கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் துன்பத்-திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயி-களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி