உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி யூனியன், மகளிர் திட்ட மேம்பாட்டு அலுவலக வளாகத்தில், வரும் தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 10 மகளிர் குழு பெண்களுக்கு, மகளிர் திட்ட வட்டார மேலாளர் அருண் குமார் தலைமையில் கோலப்போட்டி நடந்தது. பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஓட்டுப்பதிவு செய்வது போன்று கோலம் போட்டனர். பி.டி.ஓ.,க்கள் கலைச்செல்வி, மகாலிங்கம் ஆகியோர் சிறந்த கோலம் போட்ட பெண்களுக்கு பரிசு வழங்கினர். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரத்தினவேல், சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ