உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகள் கணக்கெடுப்பு பணி; ஓசூர் வனக்கோட்டத்தில் துவக்கம்

யானைகள் கணக்கெடுப்பு பணி; ஓசூர் வனக்கோட்டத்தில் துவக்கம்

கிருஷ்ணகிரி : நடப்பாண்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் நேற்று துவங்கியது. அதன்படி, ஓசூர் வனக்கோட்டத்தில், 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. முதல் நாளான நேற்று தொகுதி மாதிரி முறையில் நேரடியாக யானைகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. 2ம் நாளான இன்று நேர்கோட்டு பாதை முறையில் மறைமுக எண்ணிக்கையில் யானைகள் சாணம் கணக்கெடுப்பும். நாளை நீர்நிலை கணக்கெடுப்பில், நேரடி யானைகள் கணக்கெடுப்பு முறையும் பின்பற்றப்பட உள்ளது. இதில், 85 வன அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட, 85 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். தொலைநோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, யானைகளை கண்டறிந்து உரிய படிவத்தில் குறிப்பிடப்பட உள்ளது. அவ்வாறு பெறப்படும் தரவுகளை ஒன்று சேர்த்து, பரப்பளவிற்கு தகுந்தாற்போல கணக்கீடு செய்து, பின்னர் எண்ணிக்கை தெரிவிக்கப்படும்.முன்னதாக கணக்கெடுப்பு, முன்னேற்பாடுகள், தன்னார்வலர்களின் பாதுகாப்பு குறித்து, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி தலைமையில், வன அலுவலர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு விவரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை