மேலும் செய்திகள்
'ஆத்திச்சூடிக்கு நிகரில்லை'
10-Aug-2025
கிருஷ்ணகிரி, தமிழக அரசு, மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளோடு, தமிழின் தொன்மை பற்றியும் அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டுமென டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில், 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடுகளை வழங்கி, 'அறிவை விரிவு செய்' என்ற தலைப்பில் பேசியதாவது:தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் கல்லுாரி மாணவர்களிடையே உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சி நடக்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் அனைத்து கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் சலுகைகள் மூலம் கல்வியை தொய்வின்றி கற்பதுடன், நம் தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும்.நம் தாய்மொழியான தமிழை, பல்வேறு இடங்களில் பேசுவதை தாழ்வாக எண்ணக் கூடாது. தாய்மொழியில் பேசுவது தாழ்வாகவும், மாற்று மொழியில் பேசுவது உயர்வாகவும் எண்ணக்கூடிய மனப்பான்மையை மாற்ற வேண்டும். மகாகவி பாரதியார், 'பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடனும், கட்டி இழுத்து கால் கை முறிந்து, அங்கம் பிளந்து, இழந்து துடி தடினும், பொங்கு தமிழை பேச மறப்பேனோ என படி, எந்த சூழ்நிலை வந்தாலும் தமிழை பேச மறக்க மாட்டேன்,' என்ற கருத்திற்கிணங்க, தமிழை நன்கு கற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் சக்திசுபாசினி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
10-Aug-2025