உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

அ.தி.மு.க., சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தில், ஓசூரில் இயங்கி வரும் பிரபல மொபைல்போன் தயாரிக்கும் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடந்தது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.இதில், கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மத்துார், போச்சம்பள்ளி, அகரம், வேலம்பட்டி, சந்துார், நெடுங்கல், வேப்பனஹள்ளி, பர்கூர், மகாராஜகடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ