உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு கொடிவேரியில் தடை நீட்டிப்பு

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு கொடிவேரியில் தடை நீட்டிப்பு

கோபி பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகளுக்கு தடை உத்தரவு நீடித்ததால், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை, இரண்டாம் நாளாக நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 102 அடியை எட்டியதால், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு பவானி ஆற்றில் திறக்கப்பட்ட வினாடிக்கு, 5,300 கன அடி தண்ணீர், 32 கி.மீ., தொலைவை கடந்து மாலை, 6:00 மணிக்கு கோபி அருகே கொடிவேரி தடுப்பணையை அடைந்தது. அதேசமயம் எந்த நேரத்திலும், உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால், நேற்று முன்தினம் முதல், முன்னெச்சரிக்கையாக கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இரண்டாம் நாளான நேற்று காலை 9:00 மணிக்கு, பவானி ஆற்றில் வினாடிக்கு, 2,500 கன அடியும், 11:00 மணிக்கு, 2,100 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றுலா பயணிகளுக்கு தடை உத்தரவு நீடித்ததால், கொடிவேரி தடுப்பணை வளாகம் இரண்டாம் நாளாக நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது. அதேசமயம் வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர், டூரிஸ்ட் வேன் போன்ற வாகனங்களில் வந்து, தடை உத்தரவை அறிந்த பின், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !