உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மருத்துவ கல்லுாரி பெயரில் போலி இணையதளம்

கிருஷ்ணகிரி மருத்துவ கல்லுாரி பெயரில் போலி இணையதளம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் அலுவல் முத்திரை சின்னம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக அலுவல் முத்திரை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் https://gmckrishnagiri.org/ என்ற போலியான இணையதள முகவரி உருவாக்கி உள்ளனர். அதில், கல்லுாரியின் பெயரில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான போலி இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிட்டுள்ளனர். அந்த போலி ஆணையில், இரு மாணவர்களின் பெயருடன் நீட் பதிவு எண், மாணவர்களின் பெற்றோர் பெயர்கள், கல்லுாரி கட்டண விபரங்களுடன் மருத்துவ மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி கட்டணத்தை செலுத்த வேண்டிய, வங்கி கணக்கு விபரங்களும் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற போலியான இணையதள முகவரி எதுவும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையால் உருவாக்கம் செய்யப்படவில்லை. இதுபோன்ற போலியான இணையதள முகவரியை நம்பி, பணம் செலுத்தவோ அல்லது நேரடியாக மாணவர் சேர்க்கை போன்ற போலியான ஆணைகளை கண்டு, பொதுமக்கள், மாணவர்கள் எவரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை