உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கத்திரிக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

கத்திரிக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டி, கானம்பட்டி, கோவிந்தாபுரம், பாவக்கல் உள்ளிட்ட கிராமங்கள், பாம்பாறு அணைப்பகுதி அருகே அமைந்துள்ளதால், வற்றாத பாசனத்திற்கு தண்ணீர் வசதி எப்போதும் உள்ளது. முழுக்க விவசாயத்தை மட்டுமே கிராம மக்கள் நம்பி உள்ளனர். இப்பகுதியில், 100 ஏக்கருக்கும் மேல், 6 மாத பயிரான பச்சை கத்திரிக்காய் சாகுபடி செய்கின்றனர். இவை அறுவடை செய்யப்பட்டு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்தாண்டு கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்ற பச்சை கத்திரிக்காய், தற்போது கிலோ, 10 முதல், 15 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கத்திரிக்காய் சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரண உதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை