உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொண்டை கடலை பயிர் சாகுபடியில் விவசாயிகள்

கொண்டை கடலை பயிர் சாகுபடியில் விவசாயிகள்

தர்மபுரி, டிச. 19-தர்மபுரி மாவட்டத்தில் கார்த்திகை மாதத்திலேயே குளிர் அதிகரித்ததால், விவசாயிகள் மானாவாரியாக கொண்டை கடலை பயிர் சாகுபடி செய்ய துவங்கினர். இப்பயிருக்கு தண்ணீர் மற்றும் மருந்து தெளிக்க தேவையில்லை. குளிர் நிறைந்த பகுதிகளில் மட்டுமே, இப்பயிர் செழித்து வளரும். தற்போது மார்கழி மாதம் துவங்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், பழைய தர்மபுரி, மதிகோண்பாளையம், துாதரையன் கொட்டாய், செங்கல்மேடு, நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் இந்த குளிர் காலத்தில் கொண்டைகடலை பயிரை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை