உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியையொட்டி கொட்டிய கிரானைட் கழிவுகளால் அச்சம்

அரசு பள்ளியையொட்டி கொட்டிய கிரானைட் கழிவுகளால் அச்சம்

அரசு பள்ளியையொட்டி கொட்டியகிரானைட் கழிவுகளால் அச்சம்போச்சம்பள்ளி, நவ. 22-மத்துார் அடுத்த, சின்னஆலேரஹள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில், 220 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 4 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.அதேபோல், பள்ளி கட்டடம், வளாகத்தை ஒட்டி கிரானைட் கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கியுள்ள விஷ ஜந்துகள் அடிக்கடி பள்ளி வளாகத்தினுள் புகுந்து வருகிறது.இதனால் பள்ளி மாணவ, மாணவியர் அச்சத்தில் உள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கிரானைட் கழிவுகளை அகற்றி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை