உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நிறுத்தியிருந்த லாரியில் தீ: கேபின் பகுதி எரிந்து நாசம்

நிறுத்தியிருந்த லாரியில் தீ: கேபின் பகுதி எரிந்து நாசம்

ஓசூர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பொருட்களை ஏற்றி வர, ‍கேரளாவில் இருந்து, மினி கன்டெய்னர் லாரி சென்றது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிவம்குமார், 32, என்பவர் ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம், நேற்று அதிகாலை லாரியை நிறுத்தி விட்டு, கேபின் பகுதியில் டிரைவர் படுத்து துாங்கினார். அதிகாலை, 5:15 மணிக்கு, லாரியின் முன்பகுதியில் கரும்புகை வந்தது. டிரைவர் சிவம்குமார் சுதாரித்து, தீயை அணைக்க முயற்சித்தார் அதற்குள், கேபின் பகுதி தீப்பிடித்து எரிந்தது. ஓசூர் தீயணைப்புத்துறையினர் சென்று தீயை அணைப்பதற்குள், லாரி கேபின் பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. சூளகிரி போலீசார் விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை