உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துாய்மை பணியாளர்கள் 300 பேருக்கு பிளாஸ்க்

துாய்மை பணியாளர்கள் 300 பேருக்கு பிளாஸ்க்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் என, 300 பேருக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் பிளாஸ்க் வழங்கினார்.இது குறித்து அவர் கூறுகையில், “மழைக்காலம் தொடங்கி விட்டதால் கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு பயன்படும் வகையில், 300 பேருக்கு பிளாஸ்க்குகளை என் சொந்த நிதியில் வழங்கி உள்ளேன்,” என்றார். நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை