உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சென்டர் மீடியனால் பூ வியாபாரிகள் பாதிப்பு; எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

சென்டர் மீடியனால் பூ வியாபாரிகள் பாதிப்பு; எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் மாலுார் செல்லும், பாகலுார் சாலையை சீரமைக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதனால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், பாகலுார் ரோடு சந்திக்கும் இடத்தில், வாகனங்கள் குறுக்கே செல்லாமல் இருக்க, நேற்று முன்தினம் போலீசார் சென்டர் மீடியன் அமைத்தனர். அதனால், ஓசூர் காளிகாம்பாள் காமடீஸ்வரர் கோவில் வளாகத்தில், அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள பூ மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் பூக்களை கொண்டு வந்து திரும்பி செல்ல முடியவில்லை. நீண்ட துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது.சென்டர் மீடியன் சிமென்ட் கற்களை வியாபாரிகள் அகற்றியதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து, பூ வியாபாரிகள் சென்று வர வசதி செய்ய வேண்டும் என, போலீசாரிடம் அறிவுறுத்தினார். உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன், பாகலுார் சாலை பணியை மேற்கொள்ளும் கான்ட்ராக்டரை சந்தித்து, சாலையில் பதிக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் குடிநீர் குழாய் பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். அதன் பின் பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி