மேலும் செய்திகள்
20ல் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்
16-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியிலுள்ள வீடு மற்றும் இடத்தை விற்பதாக கூறி பலரை ஏமாற்றி, 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள், 10க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்.அதில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி, ராயப்ப முதலி தெருவில் வசிக்கும் உமாராணி, அவரது கணவர் பத்ரிநாத் மற்றும் அவரது மகன் ராகவேந்திர குப்தா ஆகியோருக்கு சொந்தமாக, கிருஷ்ணகிரி நகரிலுள்ள, 8,158 சதுர அடி வீடு மற்றும் காலி மனை ஆகியவற்றை விற்பதாகவும், அவர்களின் வங்கி கடனை அடைக்க வேண்டும் எனவும் கூறி, வியாபாரம் பேசினர்.அதை நம்பி காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்த முனுசாமி மற்றும் மூவரிடம் கடந்த, 2021ல், 2.50 கோடி ரூபாய் முன்பணம் வாங்கி ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால், பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. விசாரித்தபோது, அதே இடத்தை விற்பதாக கூறி, கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நந்தகுமார், பிரபு, ஜான்ஜோசப், வீரமணி, சக்திவேல், இந்திரன், நாகேந்திரன் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோரிடமும், மொத்தம், 9.90 கோடி ரூபாய் முன்பணம் பெற்றுள்ளனர். தவிர சென்னை சாலையில் அவர்கள் வைத்திருக்கும் கடையை சீரமைப்பதாக கூறி, 30 லட்சம் ரூபாய் கடனும் வாங்கியுள்ளனர்.இதையறிந்த அனைவரும், பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை கொடுத்து விடுவோம் என, 4 ஆண்டுகளாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இதை விசாரித்து, நிலத்தை வாங்க நாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
16-Apr-2025