இலவச கண் பரிசோதனை முகாம்
ஓசூர், ஓசூர் அரிமா சங்கம் மற்றும் மணிகண்ட ஐயப்பா சேவா சங்கம் மற்றும் ஸ்ரீதர்ம சாஸ்தா பக்த சபா, அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ சிறுவர் பூங்காவில், பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மணிகண்ட ஐய்யப்பா சேவா சங்க தேசிய அமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அரிமா சங்க நிர்வாகிகள் ஒய்.வி.எஸ்., ரெட்டி, ராஜ், டாக்டர் சுவாமிநாதன் மற்றும் இந்திரா, சந்திராரெட்டி, பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.