இலவச பயிற்சி வகுப்பு
கிருஷ்ணகிரி, ஜன. 2-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10:30 மணியளவில் துவங்கப்பட உள்ளது.இப்பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரிதேர்வுகளும் நடத்தப்படும். இந்ததேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வலுவலகத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் உள்பட, 3,000க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய இலவச நுாலக வசதி, இலவச வைபை வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://bitly.cx/QYag என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவுசெய்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0434 3-291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.