மேலும் செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
24-Sep-2025
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்விற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு கடந்த, 30ல், துவங்கப்பட்டது.பயிற்சி வகுப்பில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். தேர்விற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அலுவலகத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் உட்பட, 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய இலவச நுாலக வசதி, இலவச வைபை வசதிகளும் உள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://tinyurl.com/yszft5p3 என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343-291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
24-Sep-2025