போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்q
போச்சம்பள்ளி: புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், போச்சம்-பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் அதி-களவில் குவிந்தனர். இதனால், ஆட்டிறைச்சி கிலோ 750 முதல், 800 ரூபாய் வரை விற்கப்பட்-டது. அதேபோல், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசா-யிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கிராம புறங்களில் இருந்து வந்திருந்த மக்கள், வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்-கியதால், 14 கிலோ எடை கொண்ட ஆடு, 10,000 ரூபாய் எனவும், 18 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு, 15,000 ரூபாய் எனவும் விற்பனையானது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. * நேற்று, இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மற்றும் பழையபேட்டையில் உள்ள இறைச்சிக்கடைகள், பழையபேட்டை மற்றும் ராயக்கோட்டை சாலையில் உள்ள மீன் மார்க்கெட் பகுதிகளில், பொதுமக்கள் குவிந்தனர். இதனால் பழைய-பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.