உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம்: 2வது முறையாக ரத்தான அடிக்கல் நாட்டு விழா

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம்: 2வது முறையாக ரத்தான அடிக்கல் நாட்டு விழா

ஓசூர்: கிருஷ்ணகிரியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது; போலுப்பள்ளி அருகே மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டதால், ஓசூர் அரசு தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு தேவையான கட்டடங்களை கட்ட, தி.மு.க., அரசு, 100 கோடி ரூபாயை ஒதுக்கிய நிலையில், ராயக்கோட்டை சாலையில் உள்ள காரப்பள்ளி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த நவ., 22 ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதல்வர், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது. அதனால், அடிக்கல் நாட்டு விழா நடக்கவில்லை.இரு மாதங்கள் கடந்த நிலையில், நேற்று காலை மீண்டும் காணொலி காட்சி மூலம் முதல்வர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டது.ஆனால், எந்த காரணமும் கூறாமல், நேற்று நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எல்காட் நிர்வாகம் சார்பில், காணொலி காட்சிக்கு தோவையான எல்.இ.டி., திரை உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி ரத்தானதால், அவற்றை திரும்ப எடுத்து சென்றனர். முதல்வர் அடிக்கல் நாட்டு விழா இருமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி துவங்கப்படாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை