உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயர்கல்வி சந்தேகங்களை விளக்க வழிகாட்டி தகவல் மைய எண்கள்

உயர்கல்வி சந்தேகங்களை விளக்க வழிகாட்டி தகவல் மைய எண்கள்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, பள்ளி மாணவர்கள், உயர்கல்வி சேர்க்கையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் குறித்த சந்தேகங்களை, உயர்கல்வி வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள், உயர்கல்வி சேர்க்கையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் குறித்த சந்தேகங்கள், தேவையான சான்றுகள் (இனச்சான்று, இருப்பிடச்சான்று, வருமான சான்று போன்றவை) மற்றும் கல்விக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆலோசனை மையம் மாணவர்களின் மேற்குறிப்பிட்ட பொருள் குறித்து மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், அவர்களின் கேள்விக்களுக்கு பதிலளித்து, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கும் நோக்குடன் செயல்படும். அதன்படி, உயர்கல்வி வழிகாட்டி தகவல் மையத்தை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரையிலும், 1077, 04343 234444 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை