உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., மாயக்கண்ணன் மற்றும் போலீசார், பின்னமங்கலம் கூட்ரோடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், சந்தாபுராவிலிருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, மளிகைக்கடையில் சில்லரை விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரிந்தது.இதனால், ஸ்கூட்டரை ஓட்டி சென்ற அகலக்கோட்டை அருகே வனகனப்பள்ளியை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் முருகேஷ், 44, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஸ்கூட்டர் மற்றும் 30,000 ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை