உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குளிர்ந்த காற்றுடன் கி.கிரியில் சாரல் மழை

குளிர்ந்த காற்றுடன் கி.கிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால், மழையின்றி வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில், பகல் முழுவதும் பனி பெய்து குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை முதல் வானம் இருண்டு காணப்பட்ட நிலையில், பகல் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. பனியும், சாரல் மழையும் சேர்ந்ததால், போன்று குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் நேற்று பலர் வீடுகளில் முடங்கினர்.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 24 முதல் வினா-டிக்கு, 563 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 503 கன அடியாக குறைந்த நிலையில் நேற்று மீண்டும், 563 கனஅடியாக அதிகரித்தது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.45 அடியாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை