உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் விமான நிலைய பணிகளை துவங்க ஹோஸ்டியா சங்கம் அமைச்சரிடம் மனு

ஓசூர் விமான நிலைய பணிகளை துவங்க ஹோஸ்டியா சங்கம் அமைச்சரிடம் மனு

ஓசூர்: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, ஹோஸ்டியா சங்கம் அமைச்ச-ரிடம் மனு வழங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக தொழில்-துறை அமைச்சர் ராஜாவுடன், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சா-லைகள் (ஹோஸ்டியா) சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துரை-யாடி, கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், அவர்கள் கூறியி-ருப்பதாவது:தொழில் நகரான ஓசூரில், சிறு, குறு மற்றும் பெரிய நிறுவ-னங்கள் பயனடையும் வகையில், வர்த்தகம் மையம் அமைக்க வேண்டும். கர்நாடகா மாநிலம், பொம்மசந்திராவில் இருந்து, ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூரில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்-துள்ளார். அப்பணிகளை விரைந்து துவங்க வேண்டும். சூளகி-ரியில் அமைக்கப்படும், 3வது சிப்காட் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஓசூருக்கு வருகை புரிந்து, தொழில்துறையின-ரோடு கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜா, ஓசூருக்கு விரைவில் வருகை தருவதாக, ஹோஸ்டியா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கர-பாணி, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ