ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.50 கோடி வரி வருவாய் இழப்பு
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு, 50 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியுடன் ஆவலப்பள்ளி, சென்னத்துார், ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி ஆகிய பஞ்.,க்கள் மற்றும் மத்திகிரி டவுன் பஞ்., ஆகியவை இணைக்கப்பட்டு, சிறப்பு நிலை நகராட்சியாக கடந்த, 2011 அக்., மாதம் தரம் உயர்த்தப்பட்டது. புதியதாக இணைக்கப்பட்ட பஞ்.,களில், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளை அடையாளம் கண்டு, தொழிற்சாலை பகுதியாக அறிவித்தி-ருந்தால், நகராட்சிக்கு சொத்து வரி வருவாய் கூடுதலாக கிடைத்-திருக்கும்.ஆனால், தொழிற்சாலை பகுதியை குடியிருப்பு பகுதியாகவே நக-ராட்சி ஆவணங்களில் வைத்திருந்தனர். அதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தளவு சொத்து வரி மட்டுமே ஒவ்வொரு, 6 மாதத்திற்கு ஒருமுறை தொழிற்சாலைகளுக்கும் விதிக்கப்பட்டன. அதை கண்டுகொள்ளாமல் இருக்க, நகராட்சி ஊழியர்களை ஒவ்வொரு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழிற்-சாலை நிர்வாகம் சிறப்பாக கவனித்து வந்தது. இதனால், நகராட்-சிக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகாவது, தொழிற்-சாலைகளுக்கு குடியிருப்பு பகுதிக்கான சொத்து வரி விதிக்கப்படு-வதை கண்டறிந்து தடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யா-ததால், தொழிற்சாலைகள் சரியான விகிதாச்சார முறையில் வரியை செலுத்தாமல் தொடர்ந்து தப்பி வந்தன. இதை, தற்போ-தைய மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் கண்டறிந்து, மண்டலம், 1 பகுதியை தொழிற்சாலை பகுதியாக மாற்றியுள்ளார். இதன் மூலம் கடந்த, 13 ஆண்டுகளுக்கும் சேர்த்து, நிலுவை தொகை-யுடன் தொழிற்சாலைகளிடம் சொத்து வரியை வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அரசின் புதிய வரி விதிப்பு சட்டம் இடையூறாக உள்ளது.அதாவது, விடுபட்ட வரி பாக்கியை ஆறரை ஆண்டுகள் மட்-டுமே வசூல் செய்ய முடியும் என புதிய வரி விதிப்பு சட்டம் கூறு-கிறது. அதனால் கடந்த, ஆறரை ஆண்டுகள் மட்டுமே தொழிற்சா-லைகளில் இருந்து நிலுவை தொகையுடன் சேர்த்து, சரியாக நிர்-ணயிக்கப்பட்ட சொத்து வரியை வசூல் செய்ய முடியும். இப்ப-ணியை மாநகராட்சி சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஒருவரிடம் கமி-ஷனர் வழங்கியிருந்தார். அவர் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால், அப்பணியை மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வந்தார். அதனால் அவரை ஓரம் கட்டி விட்டு, மாநக-ராட்சி கமிஷனரே நேரடியாக சொத்து வரி விதிப்பில் இறங்கி-யுள்ளார்.தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் மூன்று தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதி என காட்டி கடந்த காலங்களில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, 9 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்து வரியாக செலுத்தி வந்தன. இந்த ஐந்து நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பால், 40 லட்சம் ரூபாய் அளவிற்கு கூடுதலாக மாநக-ராட்சிக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. அப்படி பார்த்தால் ஓசூர் மண்டலம், 1 பகுதியில் குடியிருப்பு என்ற போர்வையில், 500க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள், குடி-யிருப்புகளுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை மட்டுமே செலுத்தி வந்துள்ளன.இதன் மூலம், மாநகராட்சிக்கு கடந்த காலங்களில், 50 கோடிக்கு மேல் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை-யடுத்து, தொழிற்சாலைகளுக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்-ளது. அதனால் கடந்த, ஆறு ஆண்டுகளுக்கான நிலுவை வரியை. தனியார் தொழிற்சாலைகள் ஒரே தவணையில் கட்ட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்'ஓசூர் மாநகராட்சிக்கு சொத்து வரி வருவாய், 50 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அவருக்கு துணை போன அலுவலர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர்.கடந்த, 35 ஆண்டுக-ளாக சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுரேஷ், ஓசூர் மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். 50 கோடி ரூபாய் முறைகேடு குறித்து பல-முறை மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட-வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உரிய நட-வடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவரும், தி.மு.க., கவுன்சிலருமான மாதேஸ்வரன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.