துாய்மை உறுதிமொழி எடுத்த 1,60,157 பேர் உலக சாதனை படைத்த ஓசூர் மாநகராட்சி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த ஆக., 15ம் தேதி, 315 இடங்களில் மொத்தம், 1 லட்சத்து, 60 ஆயிரத்து, 157 பேர் துாய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர். இது, 24 மணி நேரத்தில் அதிகமான நபர்களால், அதிக இடங்களில் உறுதி-மொழி எடுத்து கொண்ட நிகழ்வாக கருத்தப்பட்டு, உலக சாத-னையாக, 'எலைட் வோர்ல்ட் ரெக்கார்டு' நிறுவனத்தால் அங்கீக-ரிக்கப் பட்டுள்ளது.இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஓசூர் மாநகராட்சி அலு-வலகத்தில் நேற்று நடந்தது. மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தையா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர நல அலுவலர் அஜிதா, துப்புரவு அலுவலர்கள் அன்பழகன், பிரபாகரன் ஆகி-யோரிடம், எலைட் வோர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன துாதரும், மூத்த ஆய்வதிகாரியுமான அமீத் ஹிங்கரோனி, பதக்கம் மற்றும் சான்றி-தழை வழங்கினார்.அமீத் ஹிங்கரோனி பேசுகையில், ''குப்பையை தரம் பிரித்து தருதல், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருத்தல், துணிப்பையை மட்டுமே பயன்படுத்துதல், கழிவறையை பயன்படுத்துதல் போன்ற செயல்களை உறுதிமொழியாக எடுப்-பதன் மூலம், மக்களின் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தை எற்ப-டுத்தி, ஓசூர் நகரை துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதன்மை இடத்தை பிடிக்க வைப்பதற்கான மைல்கல்லாக இருக்கும்,'' என்றார்.